Rate this book

கி.மு - கி.பி [Ki.Mu Ki.Pi] (2006)

by Madhan(Favorite Author)
4.22 of 5 Votes: 5
ISBN
8183681182 (ISBN13: 9788183681186)
languge
English
publisher
கிழக்கு பதிப்பகம்
review 1: வரலாறை அவ்வளவு சுவாரசியமாக சொல்ல மதனால் மட்டும் தான் முடியும்.முதல் "ஆதிமனிதன்" ஒரு பெண் என்பது விஞ்ஞானபூர்வமான உண்மை. இதுதான் இந்த புத்தகத்தின் முதல் வரி. ஆதாரம் : மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன் அவள் விட்டு சென்ற காலடித்தடம் மற்றும் மைட்டோ காண்ட்ரியல் டி.என்.எ.(Mitochondrial DNA). முதல் ஆதி மனிதர்களி�... more�் பலவகையான மனிதர்கள் இருந்தார்கள் என்றும் அவை எல்லாம் அழிந்து மீதம் இருந்த இரண்டே இனம் நியண்டர்தால் மற்றும் க்ரோமேக்னன் மட்டும்தான். இதில் க்ரோமேக்னன் என்னும் இன்றைய மனிதர்களாகிய நம்மால் அழிக்கப்பட்டது நியண்டர்தால் இனம் என்று வரும்பொழுது எரிகிற ஆர்வத்தீயில் எண்ணையை ஊற்றுவது போல் ஆகிறது.இப்படி பல வரலாற்று நிகழ்வுகள் அடுத்தடுத்து அடுக்கிவைத்து ஆச்சர்யத்தின் உச்சிகே நம்மை கொண்டுபோகிறார் மதன். உலகின் அனைத்து பகுதிகளிலும் உருவாகிய நாகரீகம், அவற்றின் வளமை, அழிவு என்றும் முக்கியமாக இந்திய நாகரீகத்தை பற்றி கூறும் பொழுதும் ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு வார்த்தையும் மெய்சிலிர்க்கச் செய்கிறது.பாரசீகம், ஏதென்ஸ், ரோமானியம், எகிப்த், பாபிலோன், இந்தியா என்று அனைத்து நாகரீக வரலாற்று பதிவுகளையும் முக்கிய கட்டங்களையும் சுவை குன்றாமல் காட்டிச் செல்கிறார். அதில் உச்சகட்டமாக சிந்து நாகரீகத்தின் மொழி பண்டைய தமிழ் என்றும் அதை நிச்சயமாக கூறமுடியாவிட்டாலும் இதுவரையில் ஆராய்ச்சி சாத்திய கூறுகள் அனைத்தும் அவ்வாறே உள்ளன என்று அறியும்பொழுது பெருமைபடாமல் இருக்க முடியவில்லை.மொத்தத்தில் படித்து முடித்தவுடன் தலை முழுதும் பல செய்திகள் ஏறிவிட்டதுபோல் ஓர் உணர்வு. சரித்திர புத்தகத்தை படிக்கும்போது இப்படி பட்ட உணர்வு வரும் என்றால் அது ஆசிரியரின் சுவை குன்றாமல் கொண்டுசெல்லும் திறமையினால் மட்டுமே.
review 2: உலகில் முதலில் தோன்றியது பெண். அதாவது, ஆதாம் அல்ல "ஏவாள்' தான் என்கிறார் மதன். விஞ்ஞான அடிப்படையில் அதை உறுதியாகக் கூறிவிட்டு, "அட, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது உண்மைதான்!' என "லோக்கல்' ஆக சந்தோஷப்பட வைக்கிறார். உலகம் தோன்றியது, மனிதன் பிறந்தது, நாகரிகங்கள் உண்டானது, மதங்கள் வளர்ந்தது, போர்கள் உண்டது என வரலாறு தெரிந்து கொள்ளலாம். இன்னொரு சிறப்பு, இதையெல்லாம் சரித்திரப் பாடங்கள் போல போரடிக்காமல் மதன் ஸ்டைலில் படுஜாலியாகவே ருசிக்கலாம்! less
Reviews (see all)
molliejane
Interesting information in a readable pace and enjoyable writing! Madhan at his best!
Sue
This is awesome..
samefb
good book
Isamar997
hi
Write review
Review will shown on site after approval.
(Review will shown on site after approval)