வரலாறு என்னும் பொய்யை எழுதுதல்

Kublai Khanஉம் Marco Poloஉம் தோட்டத்தில் அமர்ந்திருக்க, Poloதன் பயணங்களின் கதைகளை Khanக்குச் சொன்னான் என்று எந்த வரலாற்று ஆவணத்தில் இருக்கிறது?

அவ்வளவு பெரிய பேரரசன் kublai khan, Polo சொன்ன 13ம் நூற்றாண்டுப் பொய்களை நம்பினான் என வாசகர்களை நம்ப வைக்க நாவலாசிரியர் Calvinoவிற்குத் தேவையாக இருந்தது வரலாற்றில் Kublai khanஉம் Marco Poloஉம் சந்தித்திருக்கிறார்கள் என்கிற ஒரு செய்தி மட்டும்தான். இடைப்பட்ட காலத்தில் அவர்கள் என்ன பேசி இருப்பார்கள் என்பது எல்லாமும் வரலாற்றுக்கு முக்கியமில்லாதது. ஆனால், பயணமே வாழ்க்கையாகக் கொண்ட ஒருவனும், வாழ்க்கையையே பயணமாகப் பார்க்கும் ஒருவனும், சந்தித்துக்கொண்டால் என்ன பேசி இருப்பார்கள் என்று சிந்திப்பது ஒரு வரலாற்று நாவலாசிரியனாக Calvinoவிற்கு கடினமானதாக இருந்தருக்காது.

புரிந்தவர்கள் இத்தோடு நிறுத்திக்கொள்ளலாம். புரியாதவர்களுக்கு கமல் பாஷையில் புரியும் படியாகவே சொல்வதென்றால்,

Italo Calvino என்கிற இத்தாலி நாட்டு நாவலாசிரியர் Invisible city என்கிற உலகப் புகழ்பெற்ற ஒரு நாவல் எழுதி இருக்கிறார். அதில் வரலாற்றில்-13ம் நூற்றாண்டில் மொங்கோலியப் பேரசன் Kublai Khanயை, இத்தாலி நாட்டுப் பயணி Marco Polo சந்தித்த நிகழ்வில் அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என Calvino வாசகர்களுக்குச் சொல்வதுதான் அந்த மொத்தக் கதையும்.

அந்தப் புத்தகத்தில், poloஉம், khanஉம் சந்தித்தார்கள் என்பது மட்டும்தான் வரலாற்று உண்மை. மற்ற அணைத்துமே முழுக்க முழுக்க Calvinoவின் கற்பனை. தான் பயணித்த 51நகரங்கள் பற்றி polo, kublaiக்குச் சொல்கிறான். யார் கதை சொல்கிறார்கள், யார் கதை கேட்கிறார்கள் என்பது கடைசியில் வாசகனுக்கே குளம்பிப்பிப் போகும். அதுவேறு கதை. ஆனால் ஏன் நீங்கள் இப்படி வரலாற்றுடன் பொய்யை கலக்கிறீர்கள் என யாராவது Calvinoவைக் கேட்டால், வரலாறு என்பதே ஒரு முழுப்பொய், அது முழுக்க முழுக்க பொய்யில்தான் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது என வாதிடுகிறார்.

ஏதாவது புரிகிறதா உங்களுக்கு?
சரி, விட்டு விடுங்கள். நானும் காசியப்பனும் பார்த்துக்கொள்கிறோம். இப்போதைக்கு,

நானும் ஓவியா ரசிகர் மன்றத்து ஆள்தான்கோ…
நீங்க கொஞ்சம் shut up பன்னிட்டிப் போங்கோ.

Advertisements Share this:
Like this:Like Loading...