வாட்சப் அரிய தகவல்கள்/ சூட்சுமங்கள்

சில நாட்களுக்கு முன்பு, மதம் சார்ந்த அனுதாபி ஒருவர் அனுப்பிய வாட்சப் தகவல் இது. இதிலுள்ள மாண்பு மற்றும்சூட்சுமத்தைப் பாருங்கள்.

//தெரியாத உண்மைகள்.

சித்திரை1
ஆடி1
ஐப்பசி1
தை1

எல்லாம் விழா வாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்…

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியல வச்சிருக்காங்க….!

Ok. Lets look at the science behind it…

“சூரியன் உதிக்கும் திசை கிழக்கு” னு school பசங்களுக்கு சொல்லிதறோம்….

என்னைக்காச்சும் ஒரு compass வச்சு சூரியன் உதிக்குறப்போ check பன்னி இருக்கோமா?
கண்டிப்பாக இல்ல…

நம்ம education system அ design பன்னின வெள்ளகாரன், நம்ம கிட்ட இருந்த அறிவியல் அ அழிச்சிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்திட்டு போயிறுக்கான்றதுக்கு இதுவும் ஒரு சான்று….

ஆமாங்க சூரியன் ஒரு குறிப்பிட்ட நாள்ல மட்டும் தான் exact ah கிழக்கே உதிக்கும்….

அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு extreme point la, மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்…

அப்பறம் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்…

இப்படி correct ஆ கிழக்கு ல ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் correct ஆ கிழக்குக்கு வர ஆகிற time., Correct ah “1 year”…!!!!

சரி… இதுக்கும் தமிழ் மாததுக்கும் என்ன சம்பந்தம் னு தானே யோசிக்குறீங்க….

சூரியன் correct ah கிழக்கு ல start ஆகுற நாள் தான் சித்திரை1.., புத்தாண்டு…!!! (In science it is called Equinox)

அப்புறம் extreme வடகிழக்கு point தான் ஆடி1 …. (solstice)

மறுபடியும் கிழக்குக்கு வரது ஐப்பசி1 (equinox)

Going to extreme தென்கிழக்கு is தை1 (solistice)

இந்த வானியல் மாற்றங்கள், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனணவரும் அறியும் வகையில் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்…

சித்திரை (equinox) – புத்தாண்டு
ஆடி (summer solstice) – ஆடிப்பிறப்பு
ஐப்பசி (equinox)- தீபாவளி
தை (winter solstice) – பொங்கல்

நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதன் அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்…

நமது முன்னோர்கள்…..
“தன்னிகரற்ற”
மாபெரும் அறிவாளிகள்
மிகவும் மகத்தானவர்கள்//

 

இதிலுள்ள நல்ல அரிய தகவல்களைப் பார்ப்போம்.

சரியாக கிழக்கில்லாமல், சில நாட்களுக்கு வடகிழக்கு extreme போகும், பிறகு தென் கிழக்கு extreme போகும். இவ்வளவு துல்லியமான தகவலை ஒரு kindergarten குழந்தையைக் குழப்பியடிக்காமல் கொஞ்சம் பொதுப்படையாக சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்று பாடத்திட்டத்தில் இருக்கும். தவறில்லை அதுபோக நான் பள்ளி படிக்கும் காலத்தில் ஏழாவது, மற்றும் எட்டாவது அறிவியல் பாடத்திட்டத்தில் Equnox,Solstice என்றும்   Difference between Rotation & Revolution என்றும் Solar System என்கிற பாடத்தில் வருகிறது. இந்த தகவலை நாம் கவனிக்காமல் வந்திருப்போம் அதனால் இப்போது இந்த வாட்சப் பார்வர்ட் தகவலால் நாம் நினைவு கூறலாம் அல்லது புதிதாக படித்துத் தெரிந்து கொள்ளலாம். நன்று.

சூட்சுமத்திற்கு வருவோம்.

//நம்ம education system அ design பன்னின வெள்ளகாரன், நம்ம கிட்ட இருந்த அறிவியல் அ அழிச்சிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்திட்டு போயிறுக்கான்றதுக்கு இதுவும் ஒரு சான்று….//

அதாவது இதை எழுதிய குருகுல கல்வி அபிமானி, எப்படி ஒரு விஷத்தை, அரிய தகவலுக்கிடையில் நேக்காக சொருகி விட்டுருக்கார் பாருங்கள். இதை படிகிறவர்கள் முன்னோர்கள் செய்த அதிசயத்தைப்படிக்கும்போது வாயையும்  வெள்ளைக்காரன் நம் அறிவை கெடுத்துவிட்டான் கோப உணர்ச்சியையும்  பிளந்து வைத்துப் படிக்கும்போது விஷத்தை சிந்தனையாக ஏற்றுக்கொள்ள வைக்கிறார் அந்த விஷ பிரச்சாரகர்.  ஏன் நியூட்டன், ஐன்ஸ்டைன் விதிகளை கற்றுக்கொடுக்கும் பாடத்திட்டம் தீயதா? இல்லை பாரம்பரியமாக தீண்டாமையை பழகி போதித்து வந்த குருகுல கல்வி தீயதா?

கேள்வி: சார் சும்மா பேச்ச மாத்தாதிங்க? அப்போ நம்ம பூர்வீகமா இருந்துட்டு படிச்சிட்டு வந்த பாடங்கள ஒதுக்கணும்னு ஒதுக்காதிங்க. சூரிய சந்திர கிரகண நிகழ்வுகள், கணக்கியல் துறையில் கண்டுபிடிப்புகள், சிற்பக் கலையில் கட்டிடக்கலையில் அறிவியல் நுட்பங்கள் உடையவர்கள் பல நூல்களை எழுதியுள்ளனரே? அவை இன்னும் கண்கூடாக நம் பார்வைக்கு  அமைந்திருக்கிறதே அவை எல்லாவற்றையும் ஒதுக்கிவிட முடியுமா?

நம் முன்னோர்கள் கிரகணத்தை துல்லியமாக கண்டறிந்தனர், உண்மைதான். கூடவே பல்லி விழும் பலன்கள் என சம்பந்தமில்லாத நிகழ்வுகளை முடித்துப்போடும் பழக்கத்தை கற்றுக்கொடுத்துள்ளனர். இதுவே பகுத்தறியும் ஆற்றலை ஒரு மனிதனிடமிருந்து பிரிக்கிறது இவ்வகை கண்டுபிடிப்புகள். மேலும் நம் முன்னோர்கள் இரண்டே வகையினர் தான்.

1.கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்கள்,

2.அதற்குப் பின்பு வந்தவர்கள் அக்கண்டுபிடிப்புகளை மேலும் மெருகேற்றாமல் கண்டுபிடித்தவர்களை புனிதமாக்கியவர்கள் என இரண்டு வகையினர்கள்.

முன்னவர்களால் அறிவியல் கண்டுபிடிப்புகள் தழைத்தோங்கியது, பின்னவர்களால் அறிவியலில் சாதித்தவர்களை தூக்கிக் கொண்டாடப்பட்டு கண்டுபிடிப்புகளை பரிணாம வளர்ச்சியடையாமல் தேங்க வழி வகை செய்யப்பட்டது.

காலம் காலமாக தொடர்ச்சியான மேற்கத்திய அறிவியல் கண்டுபிடிப்பு  நடைமுறை நம்மை விட தர்க்கப்பூர்வமானது(practical). அவர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டு, derivation வைத்து இது இப்படித்தான் என கூறி தங்கள் கண்டுபிடிப்புகளை தொகுக்கின்றனர் . அதன் பின் வருபவர்கள், முன்னவர்கள் செய்த பிழையை தக்க ஆதாரங்களுடன் சமன்பாடை முன்வைத்து புதியோதொரு வழியில் கண்டுபிடிப்புகளை முன் வைக்கின்றனர். முன்னவர்கள் கண்டுபிடிக்க முடியாமல்  விட்டு சென்ற மீதங்களை பின் வருவோர் ஆராய்ந்து அதன் கண்டுபிடிப்பதால் காலம் கடந்தும் அறிவியல் துண்டிக்கப்படாமல் வளர்ந்து வந்தது. ஆனால் நம் நாட்டில் மெக்காலே கல்வி வருவதற்கு முன்பே அறிவியல் கண்டுபிடிப்புகள் தேக்க நிலை அடைந்தன. அதுபோல் மரியாதை நிமித்தத்திற்காக அவர்களைப்பற்றியோ அல்லது அவர்களின் கண்டுபிடிப்புகளையோ பாராட்டி   பாயிரம் பாட வேண்டிய அவசியமில்லை. மாறாக முன்னோர் விட்டு சென்ற இடத்திலிருந்து துவங்குவதே அந்த முன்னோர்களையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் நாம் மரியாதை செய்வதற்கு ஒப்பாகும்.

தமிழ்இணைய பகுத்தறிவு உலகம், முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை என phrase கொண்டு இது போன்ற மத, வர்ண அனுதாபிகளின் பதிவுகளை (து)வைத்து செய்துவிடும் வேளையில். இந்த விஷமிகள் தங்கள் பங்குக்கு முன்னேற்றம் அடைந்த வழியைப் பாருங்கள். வார்த்தையை மட்டும் மாற்றிப் போட்டிருக்கிறார்கள். இதுதான் இவர்கள் அடைந்த/கண்ட பரிணாம வளர்ச்சி.

//நமது முன்னோர்கள்…..
“தன்னிகரற்ற”
மாபெரும் அறிவாளிகள்
மிகவும் மகத்தானவர்கள்//

-அருள் மணிவண்ணன்.

 

Advertisements Share this:
Like this:Like Loading...