Rate this book

Oru Puliyamarathin Kathai (2000)

by Sundara Ramasamy(Favorite Author)
3 of 5 Votes: 15
ISBN
8190080105 (ISBN13: 9788190467339)
languge
English
review 1: ஒரு புளியமரத்தின் கதை எனும் நாவல் சுந்தரராமசாமி அவர்களால் எழுதப்பட்டது,நாவல் உலகில் இந்திய அளவில் நேரடியாக கீப்று மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் நூல். புளியமரத்தை மையப்படுத்தி அதன் சுற்றில் ஏற்படும் வளர்ச்சியின் மாற்றங்களையும் நடைபெரும் நிகழ்வுகளையும் அழகுடன் கூறிச்செல�... more�கிறது,நாவலில் வரும் தாமோதர ஆசானை அறிவுடன் ரசிக்க முடிந்தது அவர் போன்ற கதை சொல்லியொருவர் நமக்கு கிடைக்கவில்லை எனும் ஆதங்கம் அவர் கதை சொல்லும் பொழுதிலெல்லாம் வந்து சென்றதை தவிர்க்க இயலவில்லை. அதேபோல் அவருக்கு பிரியமான யாழ்பாணம் சுருட்டு வெற்றிலை வாங்கிக்கொண்டு கதை கேட்க வரும் சிறுவர்களை வாசிக்கையில், எனது தாத்தாவுக்கு பீடியும் அஞ்ஞால் அலுப்பு மருந்தும் வாங்கிச்செல்வது நினைவில் வந்து போவதையும் தவிர்க்க முடியவில்லை. குளத்தின் மையத்தில் சிறு தீவுபோல காட்சிதரும் புளியமரம்நிலத்திற்கு இடம்பெயர்ந்ததை ஆசான் கூறும் மகாராசாக் கதை மூலம் தெரிந்து கொள்ளமுடிந்தது. செல்லம்மாள் மரக்கிளையில் தூக்கிலிட்டுக் கொண்டது,மகாராசா கால்பந்து பார்த்து கண்ணீர் விட்ட கதையெனஆசானின் ஒவ்வொரு கதையின் மூலம் புளியமரத்தின் மற்றும் புளிக்குளம் ஊரின் வரலாறையும் தெரிந்து கொள்ள முடிந்தது. நகரமயமாக்கலின் ஆரம்பமாக காத்தாடிமரங்கள் அளிக்கப்பட்டு பூங்கா உருவானதும், புளியமரத்தை சுற்றி கடைகள் கிளை விரித்ததும்,சாதி மத வேறுபாட்டிலும், துரோகங்களிலும் அரசியல் காழ்புணர்ச்சியிலும் மௌனசாட்சியாய் நிற்கும் புளியமரத்தை மையங்கொண்டு மனிதர்கள் பிளவு படுவதை சுட்டிக்காட்டி இந்த நாவல் அற்புத இலக்கியமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியத்தின் மைல்கல் என கூறப்படும் இந்நாவல் வாசிப்பவர் மனத்தில் நிச்சயம் சிறுதாக்கத்தை ஏற்படுத்திவிடும்....
review 2: தமிழின் சிறந்த நவீன செவ்வியல் படைப்பு. ஒரு கிராமம் நகராகி பின்னர் பெருநகரமாக மாறுவதை இந்நாளில் எளிதாக காணலாம். அறுபதுகளிலேயே சு. ரா. சுற்றுச் சூழல் பேரழிவை கருத்தில் கொண்டு இந்த புதினத்தை படைத்துள்ளார். ஒரு மரத்தை சுற்றி முன்னேற்றம் என்கிற போர்வையில் மனிதர்கள் நடத்தும் இயற்கையின் அழிவும், பேராசை பிடித்து அடுத்தவர்களுக்கு செய்யும் நயவஞ்சகமும் மிக நுட்பமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. less
Reviews (see all)
Aiyame20
Superb story flow without any break. And very pleased to read the Tirunelveli slang.
eidas2
Second part is excellent..
angelsalt10
good
Write review
Review will shown on site after approval.
(Review will shown on site after approval)