Rate this book

மீண்டும் ஜீனோ [Meendum Jeeno] (2000)

by சுஜாதா [Sujatha](Favorite Author)
4.02 of 5 Votes: 4
languge
English
publisher
Kizhakku Publication
review 1: மீண்டும் துரு-துரு ஜீனோ நிலா, சிபி, முகத்திரை கிழிக்கப்பட்ட ஹோலோக்ராம் ஜீவா, ரவி மற்றும் மனோ !விஞ்ஞான மாற்றத்தால் ரசாயனமாகி போன மனிதர்களின் உணர்வோடும், தொழில்நுட்பத்தால் மழுங்கடிக்கப்பட்ட ஒரு தேசத்தொடும் ஒரு புத்தகம். "என் இனிய இயந்திரா"வில் விட்டு போன கேள்விகளுக்கு பதிலுடன் வந்திருகிறத�... more� அழகுகுட்டி ஜீனோ ^_^ போன நூற்றாண்டின் மகத்தான தவறு ஜனநாயகம் தான் என்று கருத்து பேசும் போதும், நிலா சிபியுடன் சேரும்போது பொறாமை படும்போதும் கவர்கிறது ஜீனோ :)என்றேனும் ஒரு நாள் இவையெல்லாம் நடக்கலாமோ என்ற பயம் அடிவயிற்றில் பரவியது !மனிதன் உருவாகியதொன்று மனிதனை ஆளும் நாள் !சுஜாதா _/\_ master of story -telling ! மிக பிரமாண்டமான ரஜினிகாந்தின் எந்திரன் படத்துக்கான விதை இங்கிருந்து துவங்கியதே :) ^_^
review 2: இறப்பு என்றால் என்ன என்று தெரியாத இயந்திரம், அதற்கு இணையான இழப்பை அறியும் போது தன்னை அறிகின்றது. தன்னை அழிவில்லாததாக மாற்றிக் கொள்கின்றது. ஆனால் பிறந்தது அனைத்தும் அழிந்தே தீர வேண்டும் என்ற விதிப்படி, ஜீனோவின் புரட்சியில் அதுவே அழிந்து போகின்றது. கதைக்கு அந்த முடிவில்லை என்றால் முற்று பெறாமலே போயிருக்கும்.இரண்டு அந்தியாயங்களுக்கு நடுவே ஒரு தொடர்புமில்லாமல் துண்டு துண்டாக வருகின்றது. காமாவுடன் நிலா நடனமாடும் நிகழ்ச்சி வருகின்றது, அது அப்படியே அந்தரத்தில் நின்றுவிட்டு கதை எங்கோ போகின்றது. மற்றொரு அந்தியாயத்தில் நிலா ஜீனோவை விவியில் பார்க்கின்றால், அடுத்த அந்தியாயத்தில் நிலாவும் ஜீனோவும் சேர்ந்து வேறு எங்கோ இருக்கின்றார்கள். ஜீனோ இதில் மிக நிறைய technical-ஆக பேசுவது ரசிக்கவைக்கிறது ! எல்லா கதாபாத்திரங்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முன்நிற்பது ஜீனோ தான். முடிவில் நாட்டுக்கு ஜனநாயகம் கிடைத்தவுடன் இளைஞர்கள் குடித்துவிட்டு அருங்காட்சியகத்துக்கு நெருப்பு வைப்பதிலிருந்தும், ‘கடந்த நூற்றாண்டின் மகத்தான தப்பு ஜனநாயகம்’ என்று ஜீனோ சொல்வதிலிருந்தும் ஜனநாயகத்தை கேலி செய்திருப்பார் சுஜாதா !மீண்டும் ஜீனோவில் sequel உண்டாவதற்கு எல்லா சாத்தியங்களுடனும் முடிந்திருந்தது ! – தப்பிச்சென்ற வில்லன், அவசியம் ஏற்பட்டால் கிருஷ்ண பரமாத்மா போல மீண்டும் உயிர்ப்பிக்கும் என்ற மக்கள் நம்பிக்கையில் ஜீனோ என்று open endஆக முடிக்க பட்டிருந்தது ! ஆனால் அதற்க்கு ஸீக்வல் எழுதுவதற்க்கு சுஜாதா இப்போது இல்லையே ! :/ less
Reviews (see all)
booklover
technological thoughts before technology arised
LinaJ
Hope I had a junoo with me.
JenniCDS
superb sci-fic!
Write review
Review will shown on site after approval.
(Review will shown on site after approval)